ஞாயிறு, 30 டிசம்பர், 2012

புது வருடமும், முஸ்லிம்களும்!

எழுதியவர்:மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி"
புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்!?.
தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது ஒரு விதத்திலும் அறிவுப்பூர்வமான விடயமாக இருக்க முடியாது. மறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே என்று கவலைப்பட்டு, அதைப் பின்னோக்கிப்பார்த்து தனது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சரி செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற ஒரு அடியானாக தன்னை எவ்வாறு மாற்றிக்கொள்வது என்பதைப் பற்றி சிந்திப்பவனே உண்மையான புத்திசாலியாக இருக்க முடியும்.

திங்கள், 10 டிசம்பர், 2012

உணவின் சில ஒழுங்குகள்

எழுதியவர்:- அஷ்-ஷைக்: K. S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி
அழைப்பாளர், அல்-கோபர் தாஃவா நிலையம் சவூதி அரேபியா

சாப்பிட்டு முடிந்த பின் ஓதும் துஆ

النَّبِيِّصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ :” مَنْ أَكَلَ طَعَامًا فَقَالَ :اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍمِنِّي وَلا قُوَّةٍ

“”என் முயற்சியோ, என்வலிமையோ எதுவுமின்றி எனக்கு உணவளித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்

உணவின் சில ஒழுங்குகள்

بسم الله الرحمن الرحيم

நபி(ஸல்)அவர்கள் சாப்பிடுவதற்காகவும்ஒழுங்குமுகைளை கற்றுத்தந்துள்ளர்கள் அதை பேணி நடந்தால் நாம் உணவு உண்பதும்அல்லாஹுவிடத்தில் கூலி பெற்றுத்தரக்கூடிய அமைந்து விடும்.

அன்பான வேண்டுகோள்

بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு
அன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே! நீங்கள் எல்லா விதமான பாக்கியங்களையும் நிறைவாகப்  பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை  வேண்டுகின்றேன்.
இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி புதிய புதிய பெயர்களில் அமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் சமூகத்தில் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்துகின்ற நிலை சமூகத்தில் தொடர்கதையாகி விட்டது. இதன் மூலம் புதிய அமைப்பு காணக்கூடியவர்கள் என்ன

மனிதர்களே!

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம், நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (அல்குர்ஆன்: 49:13)