Social Icons

Featured Posts

வியாழன், 5 டிசம்பர், 2013

ஒரு கொள்கை களவாடப்படுகிறது!

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் உயிரினும் மேலான நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதம் அவர்களின் குடும்பத்தினர்கள், தோழர்கள் மற்றும் அவர்களை இறுதி வரை பின்பற்றும் நல்லடியார்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாகப் பாடம் பெற்றவர்கள். மார்க்கத்தை நன்முறையில் விளங்கியிருந்தனர். அவர்களின் விளக்கங்கள் பிற்காலத்தவர்களின் விளக்கங்களை விட ஏற்றுக் கொள்ளச் சிறந்ததாகும்.

சனி, 20 ஏப்ரல், 2013

இளைஞர் சமுதாயமே! ஈமானை எங்கே தொலைத்தீர்கள்?

ஆக்கம்: -எம்.எம். ஆயிஷா திஹானி

'நம்பிக்கையாளர்களான ஆண்களிடம், அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் (நபியே!) நீர்  கூறுவீராக! இதுவே அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.'  (24:30)

தற்காலத்தில் உலகம் நவீன அறிவியல் வளர்ச்சியின் உச்சகட்டத்தைத் தொட்டுள்ளது. நவீன தொழிநுட்ப தொடர்பாடல் சாதனங்களின் பயன்பாட்டால் உலகம் ஒரு குக்கிராமமாக மாறிவிட்டதுளூ உள்ளங்கையிலேயே உலகம் வந்துவிட்டது என அனைவராலும் சொல்லப்படுவது நாம் அறிந்த விடயமே. மறு புறமாக மனித மாண்புகளும் மறைந்து செல்கின்றமையும் நிதர்சன உண்மையாகும்.

திங்கள், 1 ஏப்ரல், 2013

மனம் திறந்த மடல்…



அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)

... வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் கொள்கையில்உறுதியையும்மனவலிமையையும்தந்தருள்வானாக!அல்லாஹ்வின்மகத்தானகிருபையால்மிகப்பெரிய போராட்டங்களைச் சந்தித்து நாம் பெற்ற பாக்கியமானஉண்மையான ஓர் இறைக்கொள்கை என்னும் பாக்கியத்தை நம்மில் பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காகபலவிதமான சூழ்ச்சி வலைகள் நம்மைச் சுற்றிப் பின்னப்படுகின்றன. நம்மீது இல்லாத பொய்யானகுற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றனர். நம்முடைய செயல்பாடுகளை முடக்க வேண்டுமென்பதற்காக அயராதுமுயற்சிக்கின்றனர். வரலாறு தெரியாத அப்பாவிகள் குறிப்பாக இளைஞர்கள் இவர்களது பசப்பு வார்த்தையில்மயங்கி ஏமாந்து விடுகின்றனர். அவர்கள் நம்மைப்பற்றிக் கூறுவதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டுஅப்படியே நம்பிவிடுகின்றனர்.

வெள்ளி, 22 மார்ச், 2013

தவறு செய்யப் போகின்றாயா? தொடர் 02

எழுதியவர் சகோ. பைரூஸ்

சகோதரனே!
    நீ தவறு செய்யாமல் இருப்பதற்காக அத்தவறை செய்வதற்கு முன் சில விடயங்களை நினைத்துப் பார்! என சென்ற தொடரில் சில விடயங்களைக் குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடரிலேயே,

 09.நீ தவறு செய்வதற்கு முன் நான் இந்தத் தவறை செய்து விட்டால் நபி(ஸல்) அவர்களுக்குரிய 'ஹவ்லுல் கவ்ஸர்' எனும் நீர்த் தடாகத்தில் நீர் அருந்தக் கூடிய பாக்கியம் இல்லாமல் போய்விடும். என்பதை சற்று நிதானமாக நின்று சிந்தித்துப் பார்!
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'நான் நீர்த் தடாகத்தில் இருப்பேன். என்னை யார் கடந்து செல்கின்றாரோ அவர் அதில் நீர் பருகுவார். யார் அதில் நீர் பருகினாரோ அவருக்கு ஒருபோதும் தாகமே ஏற்படாது. என்னிடம் (நீர்ப் பருக வந்த) சில கூட்டங்கள் திருப்பியனுப்பப்படுவர். அவர்களை நானும் அறிவேன். அவர்களும் என்னை அறிந்திருப்பார்கள். பின்னர் எனக்கும் அவர்களுக்கும் மத்தியில் திரையிடப்பட்டு விடும். எனவே நான் கூறுவேன். 'நிச்சயமாக அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் (அவர்களை விட்டு விடுங்கள்)'. 'அவர்கள் உமக்குப் பின்னால் (மார்க்கத்தில் புதிதாக) உருவாக்கியவைகளை  நீர் அறியமாட்டீர்' என்று கூறப்படும். எனவே நான் 'எனக்கு மாறு செய்தவர்கள் தூரமாகட்டும்' என்று கூறுவேன்.' (அறிவிப்பவர்: அபூஸஈத் அல்ஹுத்ரிய்யீ(ரழி), ஸஹ்ல் பின் ஸஃத்(ரழி), ஆதாரம்: புஹாரி)