எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் உயிரினும் மேலான நபி
முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதம் அவர்களின் குடும்பத்தினர்கள், தோழர்கள் மற்றும்
அவர்களை இறுதி வரை பின்பற்றும் நல்லடியார்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
நபித்தோழர்கள் நபி
(ஸல்) அவர்களிடம் நேரடியாகப் பாடம் பெற்றவர்கள். மார்க்கத்தை நன்முறையில்
விளங்கியிருந்தனர். அவர்களின் விளக்கங்கள் பிற்காலத்தவர்களின் விளக்கங்களை விட
ஏற்றுக் கொள்ளச் சிறந்ததாகும்.
குர்ஆனையும் சுன்னாவையும்
இந்த உம்மத்தின் கைகளில் கொண்டு சேர்த்தவர்கள் நபித்தோரழர்கள். மனிதர்களிலேயே நபிமார்களை
அடுத்து அவர்களுக்கு சிறப்பை வழங்கினான் அல்லாஹ் (ஜல்). அதனாலேயே அவர்களின் முன்மாதிரியைப்
பின்பற்றச் சொன்னான்.
அந்த முதல் சமுதாயம் மார்க்க ஞானத்திலும் நபிவழியைப் பின்பற்றுவதிலும் முத்திரை முன்மாதிரிச் சமுதாயம் ஆகும். அதனால் தான் அந்தத் தோழர்களைக் குறித்து அவர்களின் இந்த சமுதாயத்தின்
பாதுகாவலர்கள் நபி (ஸல்) என்று குறிப்பிட்டார்கள்.
தடம் புரண்டது யார்?
நபித்தோழர்கள் விஷயத்தில் த.த.ஜ என்ற அமைப்பின் தலைவர் பி.ஜை அவர்கள் ஒரு
புதிய நிலைபாடு கண்டார். ஸக்காத் குறித்த தனது புதிய ஆய்வில் இஸ்லாமிய உலகம் ஸஹீஹ்
என்று முடிவு செய்த பல ஹதீஸ்களை குறை கண்டார். சமீபத்திய ஹதீஸ்கலை அறிஞர் அல்பானி
அவர்களால் ஸஹீஹ் என்று தீர்க்கப்பட்ட ஹதீஸ்களையும் குறைகண்டதுடன் அல்பானியையும்
குறைகண்டார். அதற்கும் மேலாக தன் நிலைபாட்டை நியாயப்படுத்தி நபித்தோழர் என்று
பதிவுசெய்யப்பட்ட ஒரு நபித்தோழரை நபித்தோழர் அல்ல என்றும் துணிந்து எழுதினார்.
பலநூல்களிலும் அவரைக்குறித்து நபித்தோழர் என்று ஏனோ எழுதப்பட்டுள்ளது (?!) என்றும்
பூசி மெழுகினார். ஸக்காத் வருடம்தோறும் கொடுக்க வெண்டும் என்பதற்கு ஸஹாபாக்கள்
சம்மந்தப்பட்ட நூற்றுக்கணக்கான ஆதாரங்களை நிராகரித்தார். அதற்கு அவர் எடுத்துக்
கொண்ட காரணம்தான் நபித்தொழர்களைப் பின்பற்றக் கூடாது என்ற புதிய நிலைபாடு! இஸ்லாத்தின்
மூன்றாவது அடிப்படைத் தூண் ஆகிய ஸக்காத்தை நடைமுறைப் படுத்தியதில் நபியிடமிருந்து
நேரடியாகப் பாடம் பெற்ற ஒட்டு மொத்த நபித்தோழர்களும் தவறிழைத்தார்கள் என்ற பி.ஜை
அவர்களின் நிலைபாடு விநோதமாகவும் விசித்திரமாகவும் தெரியவில்லையா? இஸ்லாமிய உலகம்
இதுவரை அறிந்திராத புதிய ஸக்காத் கொள்கை வந்த பின்னர்தான் தமிழகத்தில் ஸஹாபாக்கள்
விவாதமும் உருவானது என்பதைப் பலரும் அறியாமலேயே இருக்கிறார்கள். இதனால்
ஸஹாபாக்களைப் பின்பற்றுதல் என்று ஒரு சாராரரை குற்றம் சாட்டுவதும் தாம் உண்மையான
குர்ஆன் ஹதீசைப் பின்பற்றுவதாக ஒரு சாரார் தம்மைப் பரிசுத்தப்படுத்திக் கொள்வதும்
நடந்து வருகிறது. வரம்பு மீறி வசைபாடுபவர்கள் குர்ஆன் ஹதீஸின் பெயரால்
தமிழ்நாட்டில் தங்கள் தலைவரையே பின்பற்றி வருகிறார்கள் என்பதையும் சற்று
சிந்திப்பீர்களாக.
"ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும்
மீண்டும் ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?"என்பது கடந்த சில
ஆண்டுகளாக தமிழக முஸ்லிம்களிடமும் உலக அளவில் வாழும் தமிழ் கூறும்
முஸ்லிம்களிடமும் முக்கிய விவாதப் பொருளாக அமைந்துள்ளது. (ஏகத்துவம் செப் - 2005)
மேற்கண்ட வாசகங்கள் ஸக்காத் விவாதம்
வெளியிடப்பட்ட ஏகத்துவம் பத்திரிகையின் முகப்புக் கட்டுரையின் வாசகங்களாகும்.
ஸக்காத் குறித்த நிலைபாடு புதியதாக உருவானது என்பதற்கு இதைவிட ஒரு சான்று
தேவையில்லை. அது போன்றுதான் ஸஹாபாக்கள் விவாதமும்.
ஸக்காத் விவாதம் வெளியிடப்பட்ட அதே மாதம் அதே இதழில்தான் ஸஹாபாக்களை இழிவுபடுத்தும் நச்சுக் கருத்துக்களும் வெளிவந்தன. நபியிடமிருந்து நேரடியாகப் பாடம் பெற்ற நபித்தோழர்கள் வேண்டுமென்றே நபிவழிக்கு மாற்றம் செய்தனர் என்று எழுதியதுடன் மட்டும் நின்று விடாமல் அதே நபித்தோழர்களை நரவாசிகள் என்று சித்தரித்து அதற்கு ஹவ்ளுல் கவ்சர் தொடர்பான ஒர நபிமொழியை தமக்கு சாதகமாக வளைத்து திரிபு வியாக்கியானம் செய்ததும் தவ்ஹீதின் பெயர் தாங்கிப் பத்திரிகைதான் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஆனால் இதே ததஜ வின் தலைவர் தவ்ஹீத் எழுச்சியின் ஆரம்ப காலத்தில் நபித்தோழர்களைப் பின்பற்றுவததான் வெற்றிக்கு வழி என்று எழுதியும் பேசியும் வந்தார் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள் உள்ளன. அதையெல்லாம் மூடி மறைத்து விட்டு தன்னால் இயற்றப்பட்ட புதிய கொள்கைகளுக்கு குர்ஆன் ஹதீஸ் முலாம் பூசி இதைத்தான் நாங்கள் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறோம் என்று ஊரெல்லாம் விளம்புவது ஒரு மோசடியே ஆகும்.
குர்ஆன் ஹதீசைப் பின்பற்றுவதில் நமக்கு
அழகிய முன்மாதிரிகள் நபித்தோழர்களே அன்றி பின்னால் புதிய கொள்கைகளை
உருவாக்கியவர்கள் அல்ல என்பதை விளங்கிக் கொள்வோமாக. தவ்ஹீதின் பெயரால் இஸ்லாமின்
உயர்கொள்கை களவாடப்படுவதை அனுமதிக்காதிருப்போமாக! அல்லாஹ் ஒருவனுக்கே
எல்லாப்புகழும்.
வெளியீடு: JAQH. குமரி மாவட்டம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக