சனி, 20 ஏப்ரல், 2013

இளைஞர் சமுதாயமே! ஈமானை எங்கே தொலைத்தீர்கள்?

ஆக்கம்: -எம்.எம். ஆயிஷா திஹானி

'நம்பிக்கையாளர்களான ஆண்களிடம், அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் (நபியே!) நீர்  கூறுவீராக! இதுவே அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.'  (24:30)

தற்காலத்தில் உலகம் நவீன அறிவியல் வளர்ச்சியின் உச்சகட்டத்தைத் தொட்டுள்ளது. நவீன தொழிநுட்ப தொடர்பாடல் சாதனங்களின் பயன்பாட்டால் உலகம் ஒரு குக்கிராமமாக மாறிவிட்டதுளூ உள்ளங்கையிலேயே உலகம் வந்துவிட்டது என அனைவராலும் சொல்லப்படுவது நாம் அறிந்த விடயமே. மறு புறமாக மனித மாண்புகளும் மறைந்து செல்கின்றமையும் நிதர்சன உண்மையாகும்.

இச் சாதனங்களின் பயன்பாட்டால் நன்மைகள் ஈட்டப்படும் அதே வேளை, மறுபுறம் இளைய சமுதாயம் சீர்கேட்டில் சிக்கித் தவிக்கின்றது என்பதை முஸ்லிம்களாகிய நாங்கள் இன்னும் உணரவில்லை போலும்! இல்லை இல்லை உணர்ந்தும் அது பற்றி கவலைப்படவில்லை போலும்!

உண்மை முஸ்லிம்களாக, ஈமானிய இளைஞர்களாக, பொதுநலன் சார்ந்தோராக, இஸ்லாத்தின் வீரர்களாக, சுவனத்தையே இலக்காகக் கொண்ட இலட்சியவாதிகளாக, முன்மாதிரிமிக்க புனிதர்களாக வாழ வேண்டிய இளைஞர் சமுதாயம் இன்று மேற்கத்தேய ஸியோனிச சக்திகளின் சதி வலைகளில் சிக்கித் தங்களது தனித்துவத்தை இழந்து நரகத்தை நோக்கி விரைகின்ற நிலை வெளிப்படையான உண்மையாக விளங்குகின்றது.

எதிர்காலத்தில் நல்லொழுக்கச் சீலர்களாக, முன்னோடிகளாக, வெற்றியாளர் களாக, வழிகாட்டிகளாக, பெரும் பெரும் அறிஞர்களாக உருவாக வேண்டிய இளைஞர் சமுதாயத்தில் பெரும்பாலானோர் கல்வியை இழந்தவர்களாக, கற்பை இழந்தவர்களாக, சுய கௌரவத்தை இழந்தவர்களாக, காடையர்களாக, சமூகம் வெறுக்கும் குணமுள்ளவர்களாக... என மாறி வாழ்கின்றமை எம்மால் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மையாகும்.

இவற்றிற்கு யார் காரணம்? பெற்றோர்களா? ஆசிரியர்களா? அல்லது அவர்கள் வழிகாட்டிகளாக, முன்மாதிரிகளாகக் கொள்பவர்களா?

கடந்த காலங்களில் ஒழுக்கத்திலும் கல்வியிலும் பெயர் போன எமது முஸ்லிம் சமுதாயம் இன்று இவை அனைத்திலும் பாரிய வீழ்ச்சி நிலையையே எய்தி வருகின்றது.

மேற்கத்தயர்களின் கத்தியில்லா, துப்பாக்கியில்லா இலைமறை காயாய் இருக்கின்ற சிந்தனா ரீதியான யுத்தத்திற்கு நாம் முகம் கொடுத்து வருகின்றோம். முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டும் தூரப்படுத்தித் திசை திருப்பவும், இஸ்லாத்தைக் கொச்சைப் படுத்தவும், முஸ்லிம்களை இழிவுபடுத்தவும் இந்த மேற்கத்தேயர்கள் செய்கின்ற அனைத்து சூழ்ச்சிகளுக்குள்ளும் சிக்கித் தவிப்பது வேறு யாருமில்லைளூ இளைஞர் சமுதாயம்தான்.

மேற்கின் கலாசார நாகரீகங்களின் பால் முஸ்லிம் இளைஞர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வரையறைகளின்றி ஆபாசக் குப்பைகளைப் புகுத்தியும், மனதைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களுக்கு எதிரான விடயங்களைத் தயாரித்து அவற்றை நல்ல விடயமாக உருமாற்றிக் காட்டியும், தவிர்க்க முடியாத அம்சங்களாக நிலைநாட்டியும் இஸ்லாத்தின் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் மெல்ல மெல்லத் தகர்த்தெறிவதற்காகச் சிந்தனா ரீதியான திட்டங்களோடு மேற்குலகக் கழுகுகள் வட்டமிட்டுத் திரிவதில் வெற்றியும் கண்டு வருகின்றன.

இவற்றையெல்லம் புரிந்து கொள்ளாத எமது இளைஞர் சமுதாயம் அவற்றைத் தமது வாழ்வில் கடைப்பிடித்து ஒழுக்கத்தை இழந்து, மார்க்கத்தை உதறி வீசி அதள பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.

இவ்வொழுக்க சீர்கேடுகளின் பால் இட்டுச் செல்லும் முக்கிய காரணிகளில் தொலைத்தொடர்பு சாதனங்களே பெருமளவில் முன்நிற்கின்றன. சினிமா ஊடகம், எழுத்து ஊடகம் என்பற்றில் சிக்குண்ட பலர் இன்று பாவத்தின் உச்சியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்று பெரும்பாலானோரின் கவனம் சினிமாவின்பால் ஈர்க்கப்பட்டதால் கலாசாரம் சீர்கெட்டுவிட்டது. ஒழுக்க வீழ்ச்சி உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கின்றது.

கல்வியைப் புகட்ட வேண்டிய ஒரு சில டியுசன் வகுப்புக்கள், பாடசாலைகள், கலாபீடங்கள் இன்று காதல் கற்பிக்கும் பீடங்களாக மாறிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளன.

இதற்கெல்லாம் காரணம் எது இதை இயக்குபவர்கள் யார் ஏன் இவற்றை செய்கின்றார்கள் என்பதை நாம் என்றாவது சிந்தித்ததுண்டா? நிச்சயமாக இல்லை. அதில் நாமும் மதி மயங்கிப் போயுள்ளோமே தவிர அவை பற்றி என்றுமே சிந்தித்தது கிடையாது என்பதுதான் உண்மை. அவ்வாறு சிந்தித்திருந்தால் எமக்கு மத்தியில் ஏற்படும் பலதரப்பட்ட பிரச்சினைகள் இன்று தீர்ந்திருக்கும்.

இஸ்லாமியக் கலாசாரத்தைப் பின்பற்றத் தயங்கும் பாடசாலைகளும், ஒழுக்க சீலர்களாகத் தங்களது பிள்ளைகளை வளர்த்தெடுக்காத பெற்றோர்களும், சமூக விவகாரங்களில் கவனம் செலுத்தாமல் தானும் தன்பாடும் என விழிகண் குருடர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சில மனிதர்களும், அந்நிய நச்சுக்களுக்குக் குடை பிடிக்கும் கருப்பு உள்ளங்களும் இதற்குக் காரணிகளாக இருக்கின்றார்கள்.

சீர்கெட்ட ஒரு சில இளைஞர் யுவதிகளால் இன்று அனைத்து இளைய சமுதாயமும் வெட்கித் தலை குனியக் கூடிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றது. கற்புக்கரசிகளாக, உதாரண புருஷpகளாக, நல்லொழுக்க மங்கையர்களாக வாழ வேண்டிய இஸ்லாமியப் பெண்கள் சமூகத்தில் இன்று ஆடை அணிந்த அரை நிர்வாணிகளாக மேக்கப்போடு சுற்றித் திரிகின்றனர். ஆண்களை ஈர்த்து காதலில் தொடங்கி கற்பை இழந்து கருவைக் கலைக்கும் நிலையைக் கூட பல பெண்கள் இன்று தொழிலாகவே செய்து வருகின்ற கேவலமான செயற்பாடுகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

பெண்கள் கற்பொழுக்கத்துடன், பெண்களுக்குரிய கண்ணியத்துடன் சமூகத்தில் வாழ வேண்டும் என்பதற்கு அல்லாஹ்; அல்குர்ஆன் மூலமாகவும் அவனது தூதர் வழியாகவும் எவ்வளவோ போதனைகளை எமக்கு வழங்கியிருக்கின்றான்.

'(நபியே!) நம்பிக்கையாளர்களான  பெண்களிடம், அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும், அவர்களது அலங்காரத்தில் வெளிப்படுவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் வெளிப்படுத்தக் கூடாது என்றும், தமது முந்தானைகளை தமது மார்பகங்கள் மீது போட்டுக் கொள்ளுமாறும் (நபியே!) நீர் அவர்களுக்குக் கூறுவீராக! மேலும், அவர்கள் தமது அலங்காரத்தைத் தமது கணவன்மார்கள் அல்லது தமது தந்தையர், அல்லது தமது கணவன்மார் களின் தந்தையர், அல்லது தமது ஆண் மக்கள், அல்லது தமது கணவன்மார்களின் ஆண் மக்கள், அல்லது தமது சகோதரர்கள், அல்லது தமது சகோதரர்களின் ஆண்மக்கள், அல்லது தமது சகோதரிகளின் ஆண்மக்கள், அல்லது தமது பெண்கள், அல்லது தமது அடிமைகள், அல்லது பெண்கள் மீது நாட்டம் இல்லாத (அவர்களை) அண்டி வாழும் (வயோதிப) ஆண்கள், அல்லது பெண்களின் மறைவிடங்கள் பற்றி விளங்கிக் கொள்ளாத சிறுவர்கள் ஆகியோரைத் தவிர ஏனையவர்களிடம் வெளிப்படுத்த வேண்டாம். தாம் மறைத்திருக்கும் தமது அலங்காரம் அறியப்படுவதற்காக தமது கால்களால் தட்வும் வேண்டாம்.'
(24:31)

எனவே, பெண்கள் சமுதாயம் விழிப்புடன் செயற்படுமானால் ஒழுக்கச் சீர்கேடுகளை முடிந்தவரை இல்லாதொழிக்க முடியும். இது இஸ்லாத்தினதும் வழிகாட்டலாகும்.

எமக்கு யார் முன்மாதிரிகள்?
சிறு வயது முதலே ஒவ்வொருவரினது மனதிலும் ஒவ்வோர் ஆசை, இலட்சியம் இருந்திருக்கும். இதில் பலரது ஆசை, இலட்சியம் சினிமா நடிகர்-நடிகைகள், விளையாட்டு வீர-வீராங்கனைகள்.... என சிறு வயது முதல் மனங்களில் ஆழமாகப் பதிந்திருக்கும்.

இதற்கு ஒரு விதத்தில் பெற்றோரும் காரணம்தான். சிறு வயதில்; பிள்ளைகள் சினிமாக்களைப் பார்ப்பதைத் தடுக்காமையும், அவர்களை அந்த நடிகர் நடிகைகளுக்கு பிள்ளைகளின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் ஒப்பிட்டுப் பேசுவதும் சரியான வழிகாட்டலை அவர்களுக்கு வழங்காமையும் அடிப்படைக் கரணங்களாக அமைகின்றன.

அல்குர்ஆன், எமக்குரிய முன்மாதிரிகள் யார்? நாங்கள் யாரை முன்மாதிரிகளாகக் கொண்டு வாழ வேண்டும் என்பதை ஆதாரத்தோடும் சரித்திர சான்றுகளோடும் கூறித் தருகின்றது. அந்த வகையில், இணை வைத்தலைத் தட்டிக் கேட்ட இப்றாஹீம்(ர), அழகும் அந்தஸ்தும் கொண்ட பெண் அழைத்தும் அல்லாஹ்வைப் பயந்து கொண்ட யூசுப்(ர), ஈமான் நிறைந்த துல்கர்னைன்(ர), சூறா கஹ்பில் கூறப்படும் இளைஞர்கள், கற்புக்கரசி மர்யம்(ர), ஆயிஷh(வ), செல்வத்தோடு வாழ்ந்தாலும் ஈமானைக் காத்துக் கொண்ட பிர்அவ்னின் மனைவி அன்னை ஆஸியா மற்றும் உம்மஹாதுல் முஃமினீன்கள்..... என சொல்லிக் கொண்டே போகலாம்.

மேற்சொன்னவர்களைத் தவிர மது, கொலை, கொள்ளை, விபச்சாரம்.... என பாவத்தில் புரண்டு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தும் எமது எதிரிகளையே நாம் முன்மாதிரிகளாகக் கொண்டிருக்கின்றோம் என்பதை ஏன் இன்னும் உணரவில்லைளூ உணரத் தயங்குகின்றீர்கள்!

எங்களுக்கு மிகவும் ஏற்ற முன்மாதிரி, நற்குணத்தின் இருப்பிடம் என்பவற்றை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஓர் அழகிய முன்மாதிரியான நபி(ச) அவர்களை எங்கள் முன்மாதிரியாக இயம்பத் தவறவில்லையே! காலை விழித்தது முதல் இரவு தூங்கும் வரை ஒரு மனிதன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை எம் உத்தம நபி முஹம்மத்(ச) அவர்கள் மூலமாக அல்லாஹ் எவ்வளவு தெளிவாகச் சொல்லித் தந்துள்ளான் என்பதை நாம் இனியேனும் புரட்டிப் பார்ப்பது எமது கடமையல்லவா! இவர்களை விடுத்து எவ்வகையிலும் தகுதியற்றோரை நாம் முன்மாதிரியாகக் கொள்ளும் வகையில் எமது ஈமானை எங்கே பறிகொடுத்தோம்!

பெற்றோர்களே உங்கள் கடமை என்ன?

'நீங்கள் ஒவ்வொருவரும் மேய்ப்பாளர்கள். உங்க் மேய்ப்பைப் பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்' (புஹாரி)

குழந்தைகள் உங்களுக்கு வழங்கப்பட்ட அமானிதங்கள்ளூ அருட்கொடைகள். இவை பற்றிய விசாரணை உறுதியானதே என்பதைப் பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் வைத்தியராகவோ, ஆசிரியராகவோ, பொறியியலாளராகவோ உருவாக்குவது மட்டுமல்ல உண்மையான வெற்றி. அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்பி மறுமையில் பெறும் வெற்றியே உண்மையான வெற்றி! அப்படிப்பட்ட வெற்றியை நோக்கிய பிள்ளைகளாக மாற்றுவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.

தண்டனை யாருக்கு?

குற்றம் புரிபவர் தனி நபரானாலும் அதைத் தடுக்காதவிடத்து மற்றவரும் குற்றவாளிதான். பாவங்கள் அதிகரிக்கும் போது அல்லாஹ்வின் தண்டனை சூழ்ந்து கொள்ளக் கூடும் என்பது சமகால நிகழ்வுகள் ஊடாகவும் நாங்கள் அறிந்து கொள்ள முடியுமாகவுள்ளது.

எனவே, பாவத்தைக் கண்டும் தடுக்காத விழிகண் குருடர்களாக வாழும் போது நபியவர்கள் கூறிக் காட்டியது போல கண்டும் தடுக்காதிருந்த கப்பல் பயணிகளின் நிலையே ஏற்படும் என்பதும் நிதர்சனமான உண்மையாகும்.

ஆகவே, அல்லாஹ்வின் அருள் பெற்ற, அவனது தண்டனைகளிலிருந்து ஈடேற்றம் பெற்ற சமூகமாக நாம் மாற ஈமானும் இறையச்சமுமே அடிப்படை அம்சங்கள்

என்பதை அல்குர்ஆன் குறிப்பிட்டுவிட்டது. இதற்கு எமக்குத் தேவை இஸ்லாமிய சூழலே!

கொலைக்குப் பெயர் போனோரை இறையச்சமுடையோராகவும், அகம்பாவம் கொண்டு மிருகங்களாக வாழ்ந்தோரை அன்பின் பர்த்திரங்களாகவும், சிலைகளையும் கற்களையும் வணங்கிக் கொண்டிருந்தோரை ஒரே இறைவனை வணங்கச் செய்ததும், உலக அலங்காரத்தில் மூழ்கி சுகபோகத்தில் திளைத்து உலகையே எண்ணி வாழ்ந்தோரை சுவனத்து மனிதர்களாக மாற்றியதும், மதுவிலும் மாதுவிலும் மூழ்கி அட்டகாசம் செய்தோரை ஒழுக்கசீலர்களாக மாற்றியதும் யார்? எது? இந்த உலக அறிஞர்களா? அவர்களின் போதனைகளா? நிச்சயமாக இல்லை. புனிதம் மிகு அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும்தான் என்பதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

இளைஞர் சமுதாயமே! நீங்கள் பாவம் இழைத்திருந்தால் பாவ மன்னிப்புத் தேடி தொலைத்த ஈமானை மீட்டிப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். மேற்கத்தேயரின் சதி வலையில் சிக்குண்டு எமது ஈமானைத் தொலைத்து எமது வாழ்வை நரகப் படுகுழியில் செலுத்திவிடாமல் அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் வழிகாட்டல்களை எடுத்து எமது முன்மாதிரிகள் யார் என்பதை இனம் கண்டு எம்மை நாமே பாதுகாத்து சுவனத்துச் சொந்தக்காரர்களாக மாற முயற்சிப்போம்! அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

உண்மை உதயம் மாத இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக