வெள்ளி, 22 மார்ச், 2013

தவறு செய்யப் போகின்றாயா? தொடர் 02

எழுதியவர் சகோ. பைரூஸ்

சகோதரனே!
    நீ தவறு செய்யாமல் இருப்பதற்காக அத்தவறை செய்வதற்கு முன் சில விடயங்களை நினைத்துப் பார்! என சென்ற தொடரில் சில விடயங்களைக் குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடரிலேயே,

 09.நீ தவறு செய்வதற்கு முன் நான் இந்தத் தவறை செய்து விட்டால் நபி(ஸல்) அவர்களுக்குரிய 'ஹவ்லுல் கவ்ஸர்' எனும் நீர்த் தடாகத்தில் நீர் அருந்தக் கூடிய பாக்கியம் இல்லாமல் போய்விடும். என்பதை சற்று நிதானமாக நின்று சிந்தித்துப் பார்!
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'நான் நீர்த் தடாகத்தில் இருப்பேன். என்னை யார் கடந்து செல்கின்றாரோ அவர் அதில் நீர் பருகுவார். யார் அதில் நீர் பருகினாரோ அவருக்கு ஒருபோதும் தாகமே ஏற்படாது. என்னிடம் (நீர்ப் பருக வந்த) சில கூட்டங்கள் திருப்பியனுப்பப்படுவர். அவர்களை நானும் அறிவேன். அவர்களும் என்னை அறிந்திருப்பார்கள். பின்னர் எனக்கும் அவர்களுக்கும் மத்தியில் திரையிடப்பட்டு விடும். எனவே நான் கூறுவேன். 'நிச்சயமாக அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் (அவர்களை விட்டு விடுங்கள்)'. 'அவர்கள் உமக்குப் பின்னால் (மார்க்கத்தில் புதிதாக) உருவாக்கியவைகளை  நீர் அறியமாட்டீர்' என்று கூறப்படும். எனவே நான் 'எனக்கு மாறு செய்தவர்கள் தூரமாகட்டும்' என்று கூறுவேன்.' (அறிவிப்பவர்: அபூஸஈத் அல்ஹுத்ரிய்யீ(ரழி), ஸஹ்ல் பின் ஸஃத்(ரழி), ஆதாரம்: புஹாரி)

வியாழன், 14 மார்ச், 2013

தவறு செய்யப் போகின்றாயா? தொடர் 01

எழுதியவர்சகோ. பைரூஸ்


இவ்வுலகில் அல்லாஹ் மனிதனைத் தவறுக்கும், மறதிக்கும் மத்தியிலே படைத்துள்ளான்.

அவ்வகையில் ஒரு மனிதன் தவறு செய்வதற்கு ஷைத்தான் தூண்டுதலாய் இருக்கின்றான். ஒரு மனிதன் தவறு செய்வதற்கு முன் தான் இத்தவறை செய்தால் தனக்கு ஏற்படக் கூடிய எதிர் விளைவுகள் என்ன? என்பதைப் பற்றிச் சிந்தித்தால் அந்தத் தவறிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.

அவ்வகையில் தவறு, பாவம் செய்வதற்ககு முன்னர் பின்வரும் விடயங்களைப் பற்றி சற்று நேரம் சிந்திக்க வேண்டும். அவையாவன,