ஆக்கம்: -எம்.எம். ஆயிஷா திஹானி
'நம்பிக்கையாளர்களான ஆண்களிடம், அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் (நபியே!) நீர் கூறுவீராக! இதுவே அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.' (24:30)
தற்காலத்தில் உலகம் நவீன அறிவியல் வளர்ச்சியின் உச்சகட்டத்தைத் தொட்டுள்ளது. நவீன தொழிநுட்ப தொடர்பாடல் சாதனங்களின் பயன்பாட்டால் உலகம் ஒரு குக்கிராமமாக மாறிவிட்டதுளூ உள்ளங்கையிலேயே உலகம் வந்துவிட்டது என அனைவராலும் சொல்லப்படுவது நாம் அறிந்த விடயமே. மறு புறமாக மனித மாண்புகளும் மறைந்து செல்கின்றமையும் நிதர்சன உண்மையாகும்.

