தேன்
ஈ கூட்டில் கல் வீசினால்?
தேன்
ஈ கூட்டில் கல் வீசினால் தேனீக்கள் கோபம் கொள்ளும், தேனீக்கள்
பல பக்கங்களிலிருந்தும் பறந்து சென்று கிட்டியவைகள் மீதெல்லாம் கொட்டி தமது
கோபத்தை திர்த்து விடும், கல் வீசியவன் திட்டமிட்டபடி
ஒளிந்து கொள்வான். போவோர் - வருவோரை தேனீக்கள் கொட்டும் பொது மக்கள் சும்மா இருக்க
மாட்டார்கள். கொட்டியது என்ற காரணத்தைக் கூறி தேனீக்களை அழிக்கலாம் அல்லது
அடக்கலாம். மக்கள் பக்கமிருந்து பரிந்து பேசுதல் இருக்காது மாறாக அழிப்பது தாம்
நியாயம் என்று பேச வைத்து விடலாம். இது இன்றும் அன்றும் இஸ்லாமிய எதிரிகளின்
வக்கிர எண்ணமாக உள்ளது.
ஒரு
தனி மனிதன் மீது உண்மைக்குப் புறமாக ஏதேனும் குற்றச்சாட்டுகளை கூறுவது அவதுறு
என்றும் அப்படி ஒருவர் கூறிவிட்டால் அவர் மீது மானநஷ்ட வழக்குத் தொடர்ந்து
தண்டனைப் பெற்றுத்தரலாம் என்று சட்டம் இருக்கும் போது உலகின் இரண்டாவது மிகப்பெரிய
சமூகமான முஸ்லிம் சமூகம் தங்களது உயிரினும் மேலாக நேசிக்கும் முஹம்மது (ஸல்)
அவர்கள் மீது ஈனக்கருத்துக்களையும் பொய் கற்பனைகளையும் புனைந்து ஒரு பெரும்
சமுதாயத்தின் மீது கருத்து வன்முறையை கட்டவிழுத்து விடுபவனை வேடிக்கை பார்த்து
புன்சிரிப்பு சரிப்பது குற்றமில்லையா? இதுதான்
கருத்து சுதந்திரமா?
இஸ்லாத்தை
வெறுப்பதில் முன்னணியில் உள்ள யூத - கிறிஸ்த்தவ அமைப்புக்கள் ஒன்றிணைந்து அன்றும்
இன்றும் முஸ்லிம்களை கருவறுக்க பல வழிகளில் முயற்ச்சி செய்து கொண்டு இருக்கின்றது.
இந்த சதித்திட்டத்தை உணராத முஸ்லிம்கள் அவர்கள் விரிக்கும் வலையில் பல நேரங்களில்
சிக்கிவிடுகின்றார்கள்.
தமிழகத்தை
பொறுத்தவரை யூதர்களோ யூத அமைப்புகளோ இல்லை, கிறிஸ்த்தவர்களும்
கிறிஸ்த்தவ அமைப்புகளும் இருக்கின்றன, ஆனால்
நாம் நம் நாட்டு கிறிஸ்த்தவர்களை எதிரிகளாக நினைப்பதும் பேசுவதும் கூடாது, காரணம் எய்தவன் இருக்க அம்பை பழிப்பது போன்று
அது ஆகிவிடும் மட்டுமின்றி கிறிஸ்த்தவ சமூகத்தின் வெறுப்பையும் நாம் சம்பாதித்தது
போலாகிவிடும் எதிர்களின் எதிபார்ப்புக்கு இது சாதகமாகிவிடும் இப்போது நடந்த தமிழக
ஆர்ப்பாட்டங்களில் சிலர் நம் தமிழகத்தில் உள்ள கிறிஸ்த்தவ சபைகளையும் அதன்
சன்னியாசிகளையும் கன்னியாஸ்தீரீகளையும் குறை கூறி பேசியதை காட்சியாக கண்டபோது
மனவேதனையாக இருந்தது, எந்த இறைத் தூதரின்
பெயருக்கு களங்கம் ஏற்ப்படக் கூடாது என்று போராடுகிறோமோ அந்த இறைத் தூதரின்
பொன்மொழிகளை கவனத்தில் கொள்ளாமல் அல்லது அறியாமல் பிற சமூகங்களில் மீது வசை
பொழிவது அந்த இறைத் தூதரை பின்பற்றுபவர்களுக்கு உகந்ததல்ல என்பதை அறிந்திடல்
வேண்டும்.
இஸ்லாத்தின்
மீதான எதிரிகளின் தாக்குதலை முறியடிக்க வெறும் ஆர்ப்பாட்டங்களாலோ, ஆத்திரபடுதலாலோ முடியாது என்பதை நாம் உணர
வேண்டும், முஸ்லிம்களாகிய நாம் ஒரே
உணர்வோடு இஸ்லாத்தை பிறமக்களுக்கு எடுத்துக் கூறத் துணிந்து இறங்க வேண்டும்.
தெருமுனைப் பிரசாரங்களிலிருந்து மாநாடுகள் வரை தொடர் நிகழ்ச்சிகளாக நடத்திக்
கொண்டே இருக்க வேண்டும். இதற்காக செலவு செய்ய சமுகத்திள்ள பணக்காரர்கள் மனமுவந்து
வாரிவழங்கவேண்டும். இஸ்லாத்தின் மீதும் நபி(ஸல்) மீதும் நன் மதிப்பை வைத்துள்ள பிற
மத சகோதரர்களை பங்கு பெற வைத்து நாடு நெடுக பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு உண்மைகளை
முஸ்லிம்களுக்கும் பிரமக்களுக்கும் பிரிய வைக்க வேண்டும், இதை தமிழக முஸ்லிம்கள் இயக்க வேறுபாடின்றி
ஒன்றிணைத்து நடத்தினால் இஸ்லாத்தின் மீதான எதிரிகளின் தாக்குதல்களையும் நம்
தமிழத்தில் ஓரளவு முறியடிக்க இயலும் மட்டுமின்றி முஸ்லிம்களையும் பொய் வழக்குகளால்
குறிவைத்து அழிக்க திட்டமிட்டிருக்கும் அதிகார வர்கத்தின் சதித்திட்டதிலிருந்தும்
ஓரளவு நாம் பாதுகாப்பு பெற இது உதவியாக இருக்கும்.
முஸ்லிம்களின்
ஆவேசம் எனும் இலக்கு வைத்து எதிரிகள் படைத்துவிடும் படைப்புக்கள் அவர்களது
நோக்கத்தை நிறைவேற்றுகின்றது போன்று முஸ்லிம்கள் நடத்து கொள்கின்றனர். நபி (ஸல்)
அவர்கள் இழிவாக்கி எடுக்கப்பட்ட இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம் பாலியல் வக்கிர
காட்சிகளால் முஸ்லிம்கள் வெகுண்டேளுவார்கள் என்று எதிரிகள் சந்தேகமின்றி கருதினர்.
அந்த ஆவேசத்தை தங்கள் உலகளாவிய முஸ்லிம் எதிர்புக்கு ஆயுதமாக்கி விடலாம் என்றும்
கணக்கிட்டிருக்கலம்.
அரசியல்
நோக்கர்கள் கூறுவது போன்று செப்டம்பர் 11 சம்பவத்தை உலக மக்களின் மனங்களில்
முஸ்லிம் தீவிரவாதமாக மீண்டும் பதிய வைக்க செப்டம்பர் மாதத்தில் இத்தைகைய
நிகழ்ச்சிகளை நடத்துவது வாடிக்கையாகி வருகின்றது, அடுத்து
அரபு வசந்தம் என்று உலகளாவிய அளவில் அறியப்பட்ட சில முஸ்லிம் நாடுகளில் நியாய
உரிமை போராட்ட மதிப்புகளை உலகமக்கள் மனங்களிலிருந்து மாற்றிவிடுவது அது போன்று ஒரு
கட்டுரையோ ஒரு படக்காட்சியோ, ஒரு பத்திரிகை துணுக்கோ
போதும் முஸ்லிம்களை வீறுகொள்ள வைக்க எனும் மேற்கத்திய ஊடகப் பிரசாரத்திற்கு வழு
ஊட்டவும் இதுபோன்று நிகழ்ச்சிகள் திட்டமிடப்படுவதாக கூறப்படுவதில் உண்மை
இருக்கலாம்.
முஸ்லிம்
உலகிர்க்கு 60 க்கு மேற்ப்பட்ட ஆட்ச்சி அதிகாரத்தின் சக்தி இருந்தும் உலகில் 160
கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை இருந்தும் முஸ்லிம் உலகின் நம்பிக்கை மற்றும்
சக்தி ஒரு ஆபாச சிந்தனையாளனின் வக்கிர கற்பனை படைப்பில் அடிப்பட்டுவிடும் என்றோ
உலகிர்க்கோ பிரகாசமான ஒரு மாபெரும் ஒளியின் பிரகாசம் மங்கிப் போகுமேன்றோ நினைப்பது
நம்மை நாமே ஏமாற்றுவது போன்று ஆகும். எனவே எதிரி எதிர்பார்ப்பது போலன்றி நாம்
முன்மாதிரியுடன் எதிர்ப்புகளை பதிவு செய்ய வேண்டும், அதுவே
உலகுக்கு முன் எதிரிகள் இழிவடைந்து பின்வாங்க ஏதுவாக இருக்கும்.
எல்லாம்
வல்ல இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக ! ஆமீன்
உங்கள் சகோதரன்
அப்துல் ஹமீது குறிஞ்சியார்
பஹ்ரைன்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக