அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)
... வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் கொள்கையில்உறுதியையும்மனவலிமையையும்தந்தருள்வானாக!அல்லாஹ்வின்மகத்தானகிருபையால்மிகப்பெரிய போராட்டங்களைச் சந்தித்து நாம் பெற்ற பாக்கியமானஉண்மையான ஓர் இறைக்கொள்கை என்னும் பாக்கியத்தை நம்மில் பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காகபலவிதமான சூழ்ச்சி வலைகள் நம்மைச் சுற்றிப் பின்னப்படுகின்றன. நம்மீது இல்லாத பொய்யானகுற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றனர். நம்முடைய செயல்பாடுகளை முடக்க வேண்டுமென்பதற்காக அயராதுமுயற்சிக்கின்றனர். வரலாறு தெரியாத அப்பாவிகள் குறிப்பாக இளைஞர்கள் இவர்களது பசப்பு வார்த்தையில்மயங்கி ஏமாந்து விடுகின்றனர். அவர்கள் நம்மைப்பற்றிக் கூறுவதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டுஅப்படியே நம்பிவிடுகின்றனர்.


