செவ்வாய், 16 அக்டோபர், 2012

சூனிய மாயையில் இயக்க வாதிகள்



சூனிய மாயையில் இயக்க வாதிகள்
நபி (ஸல்) அவர்களை சூனியத்தின் மூலம் யூதர்கள் பாதிப்படையச்செய்தார்கள்
என்ற ஹதீஸை மறுப்பதற்காக ஒரு சாரர் எத்தனையோ கற்பனை கேள்விகளை கேட்டு
வாதங்களை நிரப்பி குர்ஆன், ஹதீஸின் முக்கியத்துவத்தை மழுங்கடிக்க செய்து
வாதங்களின் நியாயங்களை மட்டுமே மனதில் ஏற்றி மார்கத்தை விளங்கிக் கொள்ளக்
கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கும் அபாயமான ஒரு சூழலை உருவாக்க முயற்சி
நடந்து கொண்டிருப்பதை காண்கின்றோம்.

இது போன்று அதிகப் பிரசங்கித்தனமான கேள்வி-பதில் வாதத்திறமையின் அபாயமான
மறுப்பக்கத்தை இவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். தேவையில்லாத
வாதமுகங்களை வைத்து அதர்க்கு விவாத பதில்களை தநஏற்றுக்கொண்ட சரியான மார்க்கபரம்பரையின் உயரிய
அணுகுமுறைகளை தகர்த்தெறிய முயற்சிக்கின்றார்கள். சமிபத்திய இவர்களது
வாதவிவாத கேள்வி-பதில்
சூனியத்தை நம்பும் மக்கா (கஃபத்துல்லா) இமாமுடன் மஃமூமாக தொழுதல் கூடுமா?
இவர்களது புது வாதங்களை கேட்டு குழம்பிப் போன இவர்களது அனுதாபிகள் புது
சந்தேகப்பட்டியலில் ஒரு கேள்வி இது’ பதில் சூனியத்தை நம்புவது ஷிர்க்
என்றும் அப்படிப்பட்ட இமாம்களின் பின் நின்று தொழுவது கூடாது என்றும்
சம்மந்தமில்லாத வாதங்களை வைத்து பதிலும் கொடுக்கப்பட்டது.
சூனியம் என்பது குறித்து குர்ஆன் கூறுவது என்ன? நபி(ஸல்) அவர்களுக்கு
சூனியத்தால் ஏற்ப்பட்ட பாதிப்பு என்ன? என்று மார்க்கத்தில் பகலைப்போன்று
அறிவு கிடைத்திருக்க தேவை இல்லாமல் கேட்பவர்களுக்கு குழப்பம் ஏற்ப்படும்
விதமாகவும் வாதங்களை வைத்து விவாதிப்பது ஒருக்காலும் மார்கத்திற்கு
செய்யும் தொண்டாக இருக்காது மாறாக இது மார்கத்திற்குள் உருவாக்கும்
பித்னவாகத்தான் இருக்கும்.
இறைதூதர் மனிதனாக வாழ்ந்தார்கள். மனித சமுதாயதிற்கு அழகிய முன் மாதிரியாக
வாழ்ந்தார்கள். அவர்களது நபித்துவ வாழ்வின் அனைத்துப்பக்கங்களும்
முஸ்லிம் உம்மத்திர்க்கு படிப்பினை பெறுவதற்கான பாடத்திட்டம் தான் என்பதை
எந்த முஸ்லிம் அறிஞர்தான் புரிந்திருக்கமாட்டார்? சூனியம் சம்மந்தப்பட்ட
அந்த ஹதீஸை நம்புவதனால் எந்த முஃமின் முஷ்ரிக்காகிவிட்டார்?
சிலவருடங்களுக்கு முன் இந்த ஹதீஸை நம்பி பிரச்சாரமும் செய்து
வந்தவர்கள்தானே இவர்களும், அப்போது இவர்கள் முஷிரிக்குகளகாத்தான்
இருந்தார்களா? மனசாட்சியை தொட்டுச்சொல்லட்டும். முஷ்ரிக் என்றால் யார்?
அவன் எப்படிப்பட்ட நம்பிக்கையுடையவன் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும்
சொல்லித்தந்தற்கு அதிகமாக இவர்கள் சொல்லிக் கொடுப்பது மார்கத்தில்
குழப்பம் ஏற்ப்படுதாதா? நபி(ஸல்) அவர்களுக்கு சூனியத்தின் பாதிப்பால் சில
தினசரி நடவடிக்கைகள் அதிக மறதிக்கு ஆட்பட்டது என்று நம்பிய முஸ்லிம்
எப்படி முஷிரிக் ஆகிவிடுவார்?
குர்ஆனில் அல்லாஹ் கூறித்தருகின்றான் “முடிச்சுக்களில் ஊதும் பெண்களின்
தீங்கை விட்டு நான் அல்லாஹ்விடம் பாதுகாவல்தேடுகிறேன் என்று பாதுகாவல்
தேடச்சொல்கிறான், நாளை இவர்கள் இதை ஒரு புது வாத விவாதமாக மாற்றி
முடிச்சுக்களில் ஊதும் பெண்களால் தீங்கு ஏற்படும் என்று கூறுவதும்,
நம்புவதும் ஷிர்க்கு ஆகும் என்று வாதங்களை அடுக்கினாள் அதையும்
ஏற்றுக்கொள்ள பக்குவப்படுத்தப்பட்ட ஒரு கூட்டம் தமிழகத்தில் உருவாகலாம்.
சிந்திப்பவர் சிந்தியுங்கள்.
இவர்களது வாதகளின்படி இந்த சூனியம் சம்பந்தமான ஹதீஸை அறிவித்த நபிதோழர்
முஷ்ரிக் – அதை பரம்பரையாக அறிவித்த அனைவரும் முஷ்ரிக்குகள், இதை தங்கள்
நுல்களில் சரியான ஹதீஸ் என்று பதிவு செய்த அத்தனை முஹத்திஸீன்களும்
அதுபோன்று சூனியம் சம்பந்தப்பட்ட இறைவசனகளுக்கு தப்ஸீர் எழுதிய அத்தனை
முபஸ்சிர்களும் இதை உலகம் முழுக்க அன்றும் இன்றும் பாடமாக நடத்திக்
கொண்டிருக்கின்ற உலகிலுள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆசிரியர்களும்
மாணவருகளும் முஷ்ரிக்குகளாக்கப்படுகிறார்கள் – நஊதுபில்லாஹ் – இது
ஷியாக்களின் வாதத்தை போன்றது ஆகும், இதுதான் இவர்கள் பிரச்சாரம் செய்யும்
இந்த கேள்விக்கு பதில் வாதத்தின் எதிர்பார்ப்பா? தயவு செய்து
சம்பந்தப்பட்டவர்கள் ஆழமாக சிந்தியுங்கள் ,
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரான மார்க்கத்தில் ஆழமான பிடிப்போடு வாழ
தவ்பீக் செய்வானாக, ஆமீன்
   நன்றியுடன்
அப்துல் ஹமீது குறிஞ்சியார்




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக